Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவு …..!

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற இந்த விசாரணையில்அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி பூரண மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம். அரசின் கொள்கை சார்ந்த முடிவு எடுக்கும் நடவடிக்கையில்  நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகளிடம் தெரிவித்தால் அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் தற்போது தடை செய்யாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது , ஒருவருக்கும் மற்றொருவருக்கு 6 அடி தூரம் இடம் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்த்துள்ளது.

Categories

Tech |