நள்ளிரவில் கழிப்பறைக்கு சென்ற இளம்பெண் முக்காடு போட்ட மர்ம உருவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பேசும் திறனை இழந்துள்ளார்
கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அஞ்சு என்பவர் ராஜீவ்காந்தி காலனியில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அஞ்சு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது நள்ளிரவு சமயத்தில் கழிப்பறையில் தண்ணீர் சிந்தும் சத்தம் கேட்டு சென்று பார்த்துள்ளார். அப்பொழுது வீட்டின் அருகே இருக்கும் கல்லூரி சுவரின் அருகில் முக்காடு போட்ட கருப்பு மனிதன் ஒருவன் நின்றுகொண்டு அஞ்சு முறைத்துப் பார்த்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் மர்ம நபரை பார்த்த அஞ்சு அதிர்ச்சி அடைந்து தனது பேசும் திறனை இழந்து விட்டார்.
இதனை தொடர்ந்து அஞ்சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் “தற்காலிகமாகவே அஞ்சு அவரது பேசும் திறனை இழந்திருக்கிறார். அவரை அதிர்ச்சியில் இருந்து மீட்க முயற்சி செய்து வருகின்றோம். முறையான சிகிச்சை கொடுத்து வருவதால் விரைவில் அவர் குணமடைந்து விடுவார்” என கூறியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் கருப்பு மனிதனின் நடமாட்டம் அடிக்கடி இருப்பதனால் அவனை கைது செய்யக் கோரி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.