மேஷ ராசி அன்பர்களே …! இன்று கேட்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரிய சாதனைகளை புரிந்து புகழ் அடைவீர்கள். இன்று புதியதாக சில விஷயங்களை மேற்கொள்வீர்கள். அதனால் செல்வம் சேர கூடிய வாய்ப்புகளும் உண்டு. வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும். அனைத்து விஷயங்களுமே இன்று சாதகமான பலனை காணலாம்.
பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடந்து கொள்வது மனதிற்கு ஆறுதலை கொடுக்கும்.உறவினர்கள் நண்பர்களின் வருகை இருக்கும். குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். காரியங்கள் நல்லபடியாக நடக்கும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்களிலும் சாதகமான பலனைக் காண முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
காதலும் நல்ல நிலையில் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் மேற்கொள்ளுங்கள் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெளிர் நீல நிறம்.