கனடாவின் ஜமேக்காவை சேர்ந்த பெண் மருத்துவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
Arlene Reid என்பவர் கனடாவின் ஓன்றாறியோவில் இருக்கும் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் Arlene கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து Arlene மகள் கூறுகையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த எனது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு வறட்டு இருமலுடன் காய்ச்சல் அதிகரித்தது. இதனை தொடர்ந்து அவசர உதவிக்கு போன் செய்து மருத்துவர்கள் வந்து எனது தாய்க்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். அவர் தனித்துவமான மற்றும் அற்புதமான பெண்மணி. அர்ப்பணிப்பு குணம் கொண்ட கடின உழைப்பாளியாக இருந்தார்” என கூறியுள்ளார்