Categories
உலக செய்திகள்

உஷாரா இருங்க… ஸ்மார்ட்போன் கொரோனாவை பரப்பலாம்.. எச்சரிக்கும் ஆய்வாளர்!

ஸ்மார்ட் போன்கள் கொரோனாவை பரப்பும் கருவியாக விளங்குகிறது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Bond பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தி ஸ்மார்ட் போன்களில் நுண்ணுயிரிகள் அதிகமாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வை மேற்கொண்ட Dr. Tajouri  இதுகுறித்து கூறுகையில் “80% நோய்க்கிருமிகள் ஸ்மார்ட் போன்கள் மூலமாக பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோன்று ஒரு நோயில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள கை கழுவும் பொழுது ஸ்மார்ட் போன்களையும் முறையாக தூய்மைப்படுத்துவது அவசியம்.

சமூகத்தில் கொரோனா தொற்று விரைவாக பரவுவதற்கு ஸ்மார்ட் போன்களே  காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். அதிலும் விமானங்கள், ரயில் ஆகியவற்றில் பயணம் செய்பவர்கள் பயணம் முடியும் பொழுது ஸ்மார்ட்போன்களை கையில் எடுத்து மீண்டும் மீண்டும் தொடுக்கின்றனர். இதனால் எளிதில் கொதொற்று பரவி இருக்கக்கூடும். ஒருவர் ஒரு நாளைக்கு 5000 முறை ஸ்மார்ட் போனை தொடுகிறார்கள். அப்படி இருக்கையில் கைகளை சுத்தம் செய்யும் பொழுது ஸ்மார்ட் போன்களையும் சுத்தம் செய்வது அவசியமானது” எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |