Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… வேலைச்சுமை அதிகரிக்கும்…உதவிகள் கிடைக்கும்…!

துலாம் ராசி அன்பர்களே …!   இன்று எல்லாவற்றிலும் எல்லாரையும் சந்தேகப்படும்  குணம் ஏற்படும். பயந்து நிலை ஏற்படும். இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். எதிரிகளால் தொல்லைகளும் கொஞ்சம் இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். திருப்திகரமான மனநிலை இன்று இருக்காது. இன்று எதைப்பற்றியும் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்.அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.

அரசு வகையில் உதவிகள் கிடைக்கும். உடன் பணிபுரிவோர்கலால் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். சில இடங்களில் உங்களுக்கு பிரச்சனைகளால் மனநிம்மதி இல்லாமல் போகும். நீண்ட நேரம் கண்விழித்து இருக்க வேண்டியிருக்கும் தயவு செய்து சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். எதைப்பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்காமல் கவனமாக இருங்கள். எல்லா விஷயங்களும் ஒரு நாள் சரியாகும் அதனால் கவலை வேண்டாம். விண்  கவலையை தயவுசெய்து ஓரங்கட்டிவிட்டு காரியத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

உடல் ஆரோக்யத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள் வெளிர் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |