தமிழ் சினிமாவில் தோல்வியையே இதுவரை சந்திக்காத இயக்குனர்களும் அவர்களின் படங்களும்
ஒரு திரைப்படம் வெற்றியடைய கதை எந்த அளவுக்கு எந்த அளவு முக்கியமோ அதே போன்று கதையை உருவாக்கிய இயக்குனரும் மிக முக்கியமானவர். ஆனால் ஒரு படம் வெற்றி பெற்றால் படத்தின் கதாநாயகனை கொண்டாடும் அளவிற்கு இயக்குனரை கொண்டாடுவதில்லை. அதோடு எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் ஒரு இடத்தில் தோல்வியை நிச்சயம் சந்திப்பார்கள். ஆனால் நான்கு படங்களுக்கும் அதிகமாக எடுத்தும் தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள் சிலர் உள்ளனர்.
அட்லீ
ராஜாராணி, தேறி, மெர்சல், பிகில் என நான்கு படங்களும் பாக்ஸ் ஆபிஸிலும் மக்கள் மத்தியிலும் கமர்ஷியலாக வெற்றி பெற்று சாதனை படைத்த படங்கள்.
ராகவா லாரன்ஸ்
முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3. இந்த நான்கு படங்களும் அதிக அளவில் மக்கள் மத்தியில் வெற்றியை பெற்ற படங்கள்.
வெற்றி மாறன்
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என ஐந்து படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்ற படங்கள்.