விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று வெற்றி மேல் வெற்றி வந்து குவியும் நாளாக இருக்கும். அதிகமான தனலாபம் கிடைக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும்.எதிர் பாலினத்தவரால் இன்பமும், ஏற்றங்களும், அதிகமாகவே ஏற்படும். மனத் தெம்பு மகிழ்ச்சியாகவே இருக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை ஏற்படும்.
தடைப்பட்டுவந்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பணியாளரிடம் கவனமுடன் பேசுவது நல்லது.கூடுமானவரை பொறுமையையும்,நிதானத்தையும் எப்போதுமே கடைபிடித்து வாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொள்வது ரொம்ப சிறப்பு. உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.