சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியம் கழிவுநீர் தொட்டியில் இருந்து இறந்த கொரோனா வைரஸ் செல்களை கண்டறிந்துள்ளது.
சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியம், களிவுநீரில் கொரோனா வைரஸ் இருக்கிறதா? அதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா? என்ற ஆராய்ச்சியில் இறங்கியது. அதன்படி, பெருங்குடி, அடையாறு, நெசப்பாக்கம், கோயம்பேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள கழிவு நீர் மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொண்டது. அதில்,
கொரோனா வைரஸின் இறந்த செல்கள் இருப்பது வெற்றிகரமாக கண்டறியப்பட்டது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் கிருமிநாசினி இந்த வைரஸ்களை அழித்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. நெதர்லாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கழிவுநீர் மூலம் வைரஸ் தொற்று பரவுகிறதா? என்று மேற்கொண்ட ஆராய்ச்சியில்,
வைரஸ் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான அறிகுறிகள், எந்த அளவுக்கு அதனுடைய பரவல் நாட்டில் இருக்கிறது என்பதையும் கழிவுநீர் மூலம் கண்டறிய முடிந்தது. அதே முயற்சியை தற்போது சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வெற்றி கொண்டிருப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது இந்தியாவில் மட்டுமல்ல தெற்காசிய நாடுகளிலேயே முதன் முறையாக வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்ட சோதனையாக இது பார்க்கப்படுகிறது.