Categories
உலக செய்திகள்

4 வருடம் முன்பு இறந்த கணவர்…. உயிரோடு வந்த ஆச்சர்யம்… மனைவி செய்த செயல்…!!

4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஜெர்மனி கால்பந்து கிளப் அணியை சேர்ந்த பிரபல வீரர் தற்போது உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Schalke அணியின் முன்னாள் வீரர் Hiannick kamba 2016ஆம் ஆண்டு அவரது சொந்த நாடான Congo-வில்  இருக்கும்பொழுது கார் விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவரது முன்னாள் மனைவி நீதிமன்றத்திற்கு சென்று தனது கணவரின் பெயரில் இருக்கும் இன்சூரன்ஸ் பணம் தனக்குத் தான் வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதோடு அவரது இறப்பு சான்றிதழ் மற்றும் அத்தியாவசிய ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார் இதனை தொடர்ந்து Kamba-வின் மனைவிக்கு கோடிக்கணக்கான பெரும் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஜெர்மனியில் இருக்கும் பல பத்திரிக்கை நிறுவனங்கள் Hiannick kamba உயிரிழக்கவில்லை என தெரிவித்து வந்தன.

இந்நிலையில் அவரது மனைவி சமர்ப்பித்த இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் காரணமாக இறந்து விட்டதாக கூறப்பட்ட Hiannick kamba தற்போது உயிரோடு இருக்கும் அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. ஜெர்மனிக்கு திரும்பியவர் Gelsenkirchen நகரில் இருக்கும் நிறுவனத்தின் வேதியல் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வருவது வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கணவன் இறந்துவிட்டார் என போலி இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து பணம் பெற்ற அவரது முன்னாள் மனைவி மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கிலிருக்கும் மர்மங்கள் விசாரணைக்கு பின் வெளிவரும் என நம்பப்படுகின்றது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |