அரசின் தவறுகள் உயிர்பலி வாங்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை, மே 17 வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. இருப்பினும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில், தனிக் கடைகள் இயங்கும் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில்,
முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பிற தனிக் கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிய நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப் படுமா ? என்ற அச்சம் தமிழக குடும்ப பெண்களிடமும் சமூக ஆர்வலர்களிடம் தொடர்ந்து நிலவி வந்தது.
இந்நிலையில் வருகின்ற மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
கோயம்பேட்டை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம்.அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு. என்று கூறியுள்ளார்.