Categories
மாநில செய்திகள்

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் திருச்சி, கரூர், தருமபுரி, சேலம், திருப்பூர், வேலூரில் வெப்பம் அதிகமாக இருக்கும் என தகவல் அளித்துள்ளது. இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |