மே 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது சாவின் ஒத்திகை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை, மே 17 வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. இருப்பினும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில், தனிக் கடைகள் இயங்கும் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பிற தனிக் கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிய நிலையில்,
டாஸ்மாக் கடைகள் திறக்கப் படுமா ? என்ற அச்சம் தமிழக குடும்ப பெண்களிடமும் சமூக ஆர்வலர்களிடம் தொடர்ந்து நிலவி வந்தது. இந்நிலையில் வருகின்ற மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,
இந்த உலகில் கவிஞர் வைரமுத்து டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மது என்பது அரசுக்கு வரவு;அருந்துவோர் செலவு.மனைவிக்குச் சக்களத்தி;மானத்தின் சத்ரு.சந்தோஷக் குத்தகை;சாவின் ஒத்திகை.ஆனால்,என்ன பண்ணும் என் தமிழ்மதுக்கடைகளின் நீண்ட வரிசையால் நிராகரிக்கப்படும்போது? என்று தெரிவித்துள்ளார்.