Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு – மின்சார வாரியம் அறிவிப்பு!

மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏப்ரல் 13ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான இறுதி நாள் மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை உள்ள தாழ்வழுத்த மின் பயனீட்டாளா்கள் ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக் கட்டணமின்றி மே 6ம் தேதி வரை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மின்கட்டணம் செலுத்த அலுவகத்திற்கு வர தேவையில்லை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம் என கூறியிருந்தது.

இந்த நிலையில் நாடு முழுவதுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் வசூலிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த ணியில் தமிழகத்தில் வீடுகள், சிறு குறு நிறுவனங்களிடம் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து  உத்தரவு பிறப்பித்தது.

மேலும் மின் கட்டணம் செலுத்த 2 மாதம் அவகாசம் வழங்குவது பற்றி பரிசீலிக்க முடியுமா? என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுருந்தது. இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் வரும் 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மார்ச் 25 முதல் மே 17ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்த மின் பயனீட்டாளா்கள் மே 22ம் தேதி வர மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |