Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று மேலும் 36 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 133 ஆக அதிகரிப்பு..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் கொரோனா வேகம் எடுக்கும் நிலையில் அருகே உள்ள மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நசரத்புரத்தில் 18 பேர், மதுராந்தகத்தில் 5 பேர், நந்திவரத்தில் 4 பேர் கொரோனாவால் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, பம்மலில் 3 பேர், திருநீர்மலையில் 2 பேர் ரங்கநாதபுரத்தில் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதவிர, கிழக்கு தாம்பரத்தில் 2 பேர், ஜமீன் பல்லாவரத்தில் ஒருவருக்கு இன்று கொரோனா உறுதியானது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் இருப்பதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நேற்று வரை, தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று பல மாவட்டங்களில் கோயம்பேட்டில் இருந்து திரும்பியவர்கள் மூலம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, இங்கு 48 பேர் குணமடைந்துள்ளனர். இருவர் மரணமடைந்துள்ளனர்.

Categories

Tech |