Categories
உலக செய்திகள்

தானாகவே ஓவியம் வரைந்து அசத்தி வரும் பன்றி….!!

தென் ஆப்பிரிக்காவில் வெண்பன்றி ஓன்று தானாகவே ஓவியங்கள் வரைந்து அசத்தி வருகிறது.   

தென் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ்சோக் (Franschhoek) என்ற  உயிரியல் பூங்காவில் வெண்பன்றி ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த வெண்பன்றி சுறு சுறுப்பாக செயல்படக்கூடியது. அதீத திறமை படைத்த  இந்தப் பன்றி ஓவியம் வரைந்து வரைந்து அசத்துவதில் கில்லாடியாக உள்ளது. இந்த பன்றி ஓவியம் தானாகவே  வரையும் திறமையையும் வளர்த்துக் கொண்டது. இந்த பன்றி நிறைய ஓவியங்கள் வரைந்து அசத்துகிறது. ஓவியம் வரையும் தூரிகையை வாயில் வைத்து பன்றி வரைந்த ஓவியங்களுக்கு மக்களிடையே கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

Image result for Meet Pigcasso – the painting pig who was saved from slaughter | Metro News

ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு பன்றி வரைந்த ஓவியத்தை வாங்கி செல்கின்றனர்.  சமீபத்தில் இந்தப் பன்றி வரைந்த ஓவியம் ஒன்று சுமார் 4,000  டாலர்களுக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. பன்றி வரைந்த இந்த ஓவியங்கள் பல்வேறு நாடுகளில் கண்காட்சிகளிலும் வைக்கப்பட்டு வருகிறது.இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பன்றியின் ஓவியத்திறமையை அறிந்த ஸ்விட்சர்லாந்தின் கடிகார நிறுவனம் ஓன்று , ஓவியத்தை தனது கைக்கடிகாரத்தில் பதித்து பன்றிக்கு  பெருமை சேர்த்தது.

Categories

Tech |