Categories
அரசியல்

” கொஞ்சம் கூட பயம் இல்லாத ஸ்டாலின் ” சுண்டு விரல் நீட்டினால் போதும்…வி.பி கலைராஜன் பேட்டி…!!

மத்திய அரசை கொஞ்சம் கூட பயம் இல்லாமல் நெஞ்சுரத்தோடு முக.ஸ்டாலின் விளாசுகின்றார் என்று திமுக_வில் இணைந்த வி.பி கலைராஜன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுவதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து வி.பி கலைராஜன் திருச்சி_யில் இருந்த முக.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக_வில் இணைந்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் , திராவிட இயக்கம் பல்லாண்டு காலம் நிலைக்க வேண்டும் , தமிழர்கள் எல்லா உரிமையும்  பெற வேண்டுமென நல்லெண்ணத்தில் அடிப்படையில் முக.ஸ்டாலின்  தலைமையை ஏற்றுக் கொள்கிறோம் . மத்திய அரசை மற்றவர்கள் எல்லாம் பயந்து அஞ்சும் நேரத்தில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் , எந்த விளைவு வந்தாலும் சந்திக்கத் தயார் என்று  நெஞ்சுரத்தோடு  மத்திய அரசை விளாசி  ,  அவர்களின் முகத்திரையைக் கிழித்துக் கொண்டு இருக்கும் ஸ்டாலின் தலைமையில் பணியாற்ற மகிழ்ச்சி அடைகிறேன் . தலைவர் ஸ்டாலின் சுண்டு விரல் நீட்டினால் சிட்டாக பறந்து  வேலை செய்ய தயாராக இருக்கின்றேன். TTV.தினகரனுடன் எந்த முரண்பாடும் இல்லை . அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து இன்னும் பலர் திமுக_வில் இணைவார்கள் என்று வி.பி கலைராஜன் தெரிவித்தார்.

Categories

Tech |