மேஷ ராசி அன்பர்களே …! இன்று சோதனைகளை வெல்ல புத்திக் கூர்மையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். அதுபோலவே இழுபறியாக இருந்த காரியமும் நல்ல வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும்.கொடுக்கல் வாங்கலில் மட்டும் கொஞ்சம் இன்று கவனமாக இருங்கள். யாரிடமும் புதிதாக கடன் வாங்க வேண்டாம். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். எதிர் பார்த்த பணம் கிடைக்கலாம்.
குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். சகோதர வகையிலும் உதவிகள் இருக்கும். எந்தவித பிரச்சனையும் இருக்காது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். மேலும் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஊதா நிறம்