Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு தொடர்பிருந்தால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய துணை முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள்!

கோயம்பேடு தொடர்பிருந்தால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய துணை முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் இதுவரை 1,724 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து சென்னையில் இதுவரை 76 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மட்டுமின்றி கோயம்பேடு சந்தையில் இருந்து சென்ற வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கடலூரில் சுமார் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோயம்பேட்டில் இருந்து வந்துள்ள நிலையில் 129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூரில் கோயம்பேடு சென்று திரும்பிய 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 20 பேருக்கும்,

தஞ்சை மாவட்டத்தில் ஒருவர் என இதுவரை 371 பேருக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயம்பேட்டில் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு தொடர்புடையவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பிற மாவட்ட மக்களும் கோயம்பேடு தொடர்பிருந்தால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |