சீனாவிற்கு முன்னதாகவே பிரான்சில் தோற்று ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்
சீனாவின் வூஹான் சென்ற வருடம் டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தோற்று தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் மற்ற நாடுகளில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இதுவரை கொரோனாவால் 36 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பரவியதாக கூறப்பட்டது ஆனால் சீன அரசு உலக சுகாதார அமைப்பிடம் டிசம்பர் 31-ஆம் தேதி தான் நகரில் கொரோனா ஏற்பட்டதாக தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் வேகமாக பரவ ஆரம்பித்தது. ஆனால் சீனா அறிவித்த தேதிக்கு நான்கு தினங்களுக்கு முன்னதாகவே பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டதாக மருத்துவர் கோஹேன் தெரிவித்துள்ளார். ஜனவரி 24ஆம் தேதி தான் முதல் கொரோனா தொற்று பிரான்சில் கண்டறியப்பட்டதாக இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில் டிசம்பர் மாத இறுதியில் பாரிஸில் இதனால் ஒருவர் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த தகவல் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி சீனாவுக்கு முன்னரே பிரான்சில் கொரோனா இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
43 வயது நபரொருவர் மூச்சுத் திணறல், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளோடு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது என மருத்துவர் கோஹேன் தெரிவித்துள்ளார். அதோடு அந்த நோயாளி உடல்நலம் மோசமாவதற்கு முன்பு தான் எந்த வெளிநாடுகளுக்கும் பயணம் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.அவரை தொடர்ந்து அவரது குழந்தைகளுக்கும் உடல் நலம் சரியில்லாமல் போனது.
நோயாளியின் மனைவி விமான நிலையத்தில் சூப்பர் மார்க்கெட்டை பணிபுரிந்துவருபவர். அங்கு வந்த சீனாவை சேர்ந்த நபர்களால் மனைவி மூலம் கணவருக்கு கொரோனா தொற்று பரவி இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. ஆனால் அவரது மனைவி உடல்நலத்தில் கொரோனா குறித்த எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. மனைவிக்கு அறிகுறிகள் ஏதுமின்றி கொரோனா பரவி இருக்கலாமோ என்ற நோக்கத்திலும் விசாரிக்க இருப்பதாக மருத்துவர் கோஹேன் தெரிவித்துள்ளார்.