கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார்.
அதில் அவர் பேசி வருவதாவது, ” நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பரவலை தடுக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 4000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய குழு பாராட்டியது”. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாகவும், அதற்காக எடுக்கப்படவேண்டிய முக்கிய முடிவுகள் குறித்தும் முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில், தற்போது மக்களுக்கு முதல்வர் உரையாற்றி வருகிறார்.