Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன் மாதத்திற்கும் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ஜூன் மாதத்திற்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே ரூ.3,280 கோடி செலவில் பல்வேறு சிறப்பு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. அதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களையும் வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு நிலையில், பல்வேறு பகுதிககளில் அன்றாட கூலி வேலை பார்க்கும் நபர்கள் உணவின்றி தவிர்த்து வருகின்றனர்.

இதனடிப்படையில் தமிழக அரசு ஏற்கனவே ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கிய நிலையில் தற்போது மே மாதத்திற்கும் இலசவ பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ஜூன் மாதமும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் விலையில்லாமல் அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |