தமிழகத்தில் 50 பரிசோதனை மையங்கள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 12,000 பேர் பரிசோதனை செய்கிறார்கள் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறியதாவது: அதிகளவில் பரிசோதனை செய்வதால் தான் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளன.
கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். சென்னை மாநகர மக்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்க்க கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
சென்னையில் நோய் தொற்று வேகமாக பரவுவதற்கு காரணம் குறுகிய தெருக்களில் அதிகமான மக்கள் வசிப்பது தான் என தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி நோய் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு ஜிங்க் மற்றும் சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.