கடக ராசி அன்பர்களே …! மனதில் பெருமித உணர்வு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஏற்படும் வளர்ச்சி நிலையை கண்டு பயப்படுவார்கள். பணி செய்பவர்கள் வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சொத்து விவகாரங்களில் கவனம் இருக்கட்டும். கணவன் மனைவிக்கு இடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள்.
உறவினர்கள் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் கூட ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் இன்று இருக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். பேச்சை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். நிதானமாகப் பேசுங்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனைவியிடம் அன்பாக நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
புதியதாக பொருட்கள் ஏதும் இன்று வாங்க வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.