Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…நிம்மதி கூடும்…யோகம் உண்டாகும்…!

சிம்ம ராசி அன்பர்களே …!    குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நல்ல பலனைத் தர ஆரம்பிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் ஏற்படும். திடீர் செலவு இருக்கும். சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும் ஆகையால் உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.

வீட்டை விட்டு வெளியில் செல்லும்பொழுது கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரம் நிதானமாகத்தான் நடக்கும். புதியதாக கடன்கள் ஏதும் இன்று வாங்க வேண்டாம். தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாகத்தான் முடியும். தனவரவு கூட தாமதமாகத் தான் வரும். ஆனால் எல்லா விஷயமும் இன்று பூர்த்தியாகிவிடும். காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும்.

புதியதாக காதல் வயப்பட கூடிய சூழலும் உண்டு. கணவர் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். சகோதரர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்கள் : 7 மற்றும் 8

அதிஷ்ட நிறங்கள்: ஊதா மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |