தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2008ஆக உயர்ந்துள்ளது. கடலூரில் இன்று ஒரே நாளில் புதிதாக 68 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு – 38, கள்ளக்குறிச்சி – 38, விழுப்புரம் – 23, திருவள்ளூர் – 18, நாமக்கல் – 15, திண்டுக்கல் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தேனி – 5, நீலகிரி – 7, கிருஷ்ணகிரி – 2, தருமபுரி, காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், சேலத்தில் தலா ஒருவரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று ஒரே நாளில் 76 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,485 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் இதுவரை 36.59% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸிற்கு இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,65,191 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 11,702 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2,537 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.