Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…போட்டிகள் அதிகரிக்கும்…சேமிப்பு கூடும்…!

தனுசு ராசி அன்பர்களே …!    இன்று எவருக்கும் தேவையற்ற வாக்குறுதிகளை மட்டும் தயவு செய்து தர வேண்டாம். நிதானமான அணுகுமுறை நன்மையை பெற்றுக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். முக்கிய செலவுகளுக்கு பணம் கிடைக்கும். பணியாளர்கள் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். இன்று உங்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்க காரியங்களும் கை கொடுக்கும்.

வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். வீண் பழிச் சொற்கள் ஏற்படலாம்.யாரைப்பற்றியும் தயவுசெய்து குறை சொல்ல வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளி நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |