Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…நம்பிக்கை உண்டாகும்…ஆரோக்கியம் கூடும்…!

கும்ப ராசி அன்பர்களே …!     எடுத்த காரியத்தில் வெற்றியடைய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். இன்று சுபநிகழ்ச்சிகள் ஏற்படும். திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை தயவுசெய்து குறைத்துக்கொள்வது நல்லது.

ஆயுதம்,நெருப்பு இவற்றை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாளுங்கள். வாகனங்களில் செல்லும் பொழுதும் ரொம்ப கவனமாக செல்லுங்கள். எந்த காரியத்திலும் அவசர முடிவுகளை மட்டும் எடுக்காதீர்கள். வேலையிலும் தயவுசெய்து அலட்சியம் காட்டாதீர்கள். மற்றவர்களுக்கு பஞ்சாயத்துக்கள் செய்யும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். காதலர்கள் இன்று பேச்சுவார்த்தையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மனைவியிடம் கலந்து ஆலோசித்த முடிவுகளை எடுப்பது ரொம்ப நல்லது. அதேபோல இன்று முக்கியமான பணிகளை செய்யும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப  நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |