மீன ராசி அன்பர்களே..! இன்று அடுத்தவர் விஷயத்தில் தயவுசெய்து எந்தவித கருத்துக்களையும் சொல்ல வேண்டாம். குடும்ப தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழிலில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை சரி செய்வதால் உற்பத்தி விற்பனை சீராகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பரின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். இன்று எதிர்பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும்.
உத்தியோகம் தொடர்பான சில பிரச்சினைகள் தீரும். இன்று நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் மிக முக்கியமானது யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். இன்று வாக்குறுதிகளை ஏதும் கொடுக்க வேண்டாம். மற்றவர்களுக்கு கடன்களையும் பெற்றுத்தர வேண்டாம். நீங்களும் மற்றவர்களுக்காக எந்தவித பொறுப்புகளையும் ஏற்று கொள்ள வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது ஒரு ரொம்ப கவனமாக செல்ல வேண்டியிருக்கும். இன்று பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மையை கொடுக்கும்.
எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். காதலர்கள் பொறுமை காப்பது அவசியம். வாக்குவாதத்தில் தயவுசெய்து இன்று ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.