அஜித் குமார் விருப்பமின்றி வெறுப்புடன் தயாரிப்பாளருக்கு இந்த படத்தை நடித்து கொடுத்துள்ளார்
தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மத்தியில் தல என்று நிலைத்திருக்கும் அஜித்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகின்றார். ஆனால் கொரோனா தொற்று பரவலின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக தீர்ந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ரசிகர்களால் கொண்டாடப்படும் தல அஜித் பல தோல்விப் படங்களையும் கொடுத்துள்ளார். அதில் அஜித்குமார் சிறிதும் விருப்பம் இன்றி வெறுப்புடன் நடித்த படமும் ஒன்று உள்ளது. அஜித்திற்கு மட்டும் அல்ல அந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கும் படத்தின் மீது பற்றுதல் இல்லாமலேயே இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் கேட்ட காரணத்திற்காக அஜித்தும் வெறுப்புடன் நடித்து முடித்த திரைப்படம் லிங்குசாமி இயக்கிய ஜி.