பசி என்ற நோய்க்கும் நல்ல தடுப்பூசியை கண்டுபிடிக்க கடவுளிடம் விஜய் சேதுபதி கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வேலைக்கு செல்ல முடியாமலும் பணம் இல்லாமலும் பசியில் வாடி வருகின்றனர். விரைவில் கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொற்றை விடவும் கொடிய நோயான பசிக்கு ஒரு நல்ல தடுப்பூசியை கண்டுபிடிச்சா எவ்வளவு நல்லா இருக்கும் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்… ஓ மை கடவுளே!!!
— VijaySethupathi (@VijaySethuOffl) May 5, 2020
நாடு முழுவதிலும் போடப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டத்தால் பல கோடி மக்கள் வேலையை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. உணவின்றி பசியால் வாடும் நிலையும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையிலேயே தனது ட்விட்டர் பக்கத்தில் “பசி என்ற ஒரு நோய் இருக்கு…. அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்வளவு நல்லா இருக்கும்…. ஓ மை கடவுளே” என ட்வீட் செய்துள்ளார். மற்ற நடிகர்களை போன்று இல்லாமல் மக்களுடன் கலந்துரையாடி அவ்வபோது மக்களுக்காக பேசி வருவதனால் தான் விஜய் சேதுபதி அனைவராலும் மக்கள் செல்வன் என அழைக்கப்படுகின்றார்.