Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எகிறிய காய்கறி விலை…! ”என்ன செய்யுறதுனு தெரியல” புலம்பும் தலைநகர் வாசிகள் …!!

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டுதன் காரணமாகவும், ஆந்திரா – கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரவேண்டிய லாரிகள் சென்னைக்கு வராததன் காரணமாகவும் சென்னையில் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ இரண்டு மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் அது தற்போது 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேபோல நாட்டு தக்காளியின் விலை 20 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது 40 ரூபாய் என்று அதிகரித்துள்ளது.

பெங்களூரில் இருந்து இறக்குமதி ஆகக்கூடிய தக்காளிகள் விலை கிலோவுக்கு 30 ரூபாய் வரை விற்கப்பட்ட இருந்த நிலையில் அது தற்போது 60 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. சென்னையின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யக்கூடிய கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது பகுதிவாரியாக தற்காலிக சந்தைங்கள் அமைக்கப்பட்டு காய்கறி விற்கப்படுகின்றன. அதே போல பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக நடமாடும் காய்கறி வாகனங்களின் மூலம் சப்ளை செய்யக்கூடிய காய்கறி விலையும் உயர்ந்திருக்கிறது.

Categories

Tech |