முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை, மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74. அவரது உடல் மதுராந்தகம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான இரும்பேடு கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்படுகிறது
1998-ல் இரண்டாம் வாஜ்பாய் அரசாங்கத்தின் போது, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்தார். இவர் மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
பின்னர் இவர் அதிமுகவில் சேர்ந்தார். 2001 ஆம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிமுக, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் இராணுவ அதிகாரியாக பங்கு பெற்றார். இராணுவத்தில் சிறந்த சேவை ஆற்றியதற்காக ஜனாதிபதியிடமிருந்து கே. சினிக் சேவா பதக்கம் பெற்றார்.