சென்னை திரு.வி.க. மண்டலத்தில் 395 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,008ஆக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
மேலும் திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் அதிகபட்சமாக திரு.வி.க. மண்டலத்தில் மொத்தமாக 395 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,
ராயபுரத்தில் 321 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டை – 206, தண்டையார்பேட்டை- 149 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருவொற்றியூர் – 32, மணலி – 13, அம்பத்தூர் – 67, அண்ணாநகர் – 169, கோடம்பாக்கம் – 327, வளசரவாக்கம் – 146, ஆலந்தூர் – 11, அடையாறு – 53, பெருங்குடி – 15, சோளிங்கநல்லூர் – 13, மாதவரம் – 27, மற்ற மாவட்டம் – 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.