சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் உளவுத்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றிய இரண்டு காவலர்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து துப்புரவு தொழிலாளர் ஒருவர் உட்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த அலுவலகம் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அனைத்து பணியாளர்களும் சோதனை செய்யப்பட்டு முக கவசம் அணிந்தே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழில் நுட்ப பிரிவில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா உள்ளது அதிர்ச்யை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்தமாக இதுவரை 16 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,008ஆக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.