தமிழக அரசு கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வந்த தொகை குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு உங்களால் இயன்ற நிவாரண உதவியை செய்யவேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்து இருந்தது. இதனால் அனைவரும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற பணத்தை செலுத்தி வந்தனர். அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 347. 76 கோடி நன்கொடை வந்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை 347 கோடியே 76 இலட்சம் ரூபாய் நன்கொடையாக வந்துள்ளதில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 20 கோடி ரூபாயும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் 5 கோடி ரூபாய்யும், எம்ஆர்எப் பவுண்டேஷன் 4 கோடி ரூபாயும், இந்தியன் வங்கி ஒரு கோடி நிவாரண உதவி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.