Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா உறுதி..!

கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரத்தில் பாதித்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், இதுவரை 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 31 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை காஞ்சிபுரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் மொத்தமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதன் காரணம் கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நபர்களால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் என பல்வேறு மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். தமிழகத்தில் நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,058 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,485 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |