Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பணம் கொடுத்தால் ஓகே..!! முரளி விஜய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த பெண் வீராங்கனை…!

கொரோனா  வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள்  அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள் வீடுகளிலேயே ஓய்வில் உள்ளனர்.  இந்தநிலையில், தங்களது ரசிகர்களுக்காக  ஒவ்வொரு நாளும் அவர்கள் காணொலி மூலம் நேர்காணல்களில் பங்கேற்று வருகின்றனர்.

அதுபோல  சில நாள்களுக்கு முன்பு  இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய், பங்கேற்ற நேர்காணலில் அவரிடம், சுவாரஸ்யமான சில கேள்விகள்  கேட்கப்பட்டன ,  அதில் ஒன்றுதான் ‘ஊரடங்கு காலம் முடிந்தவுடன் யாருடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிட ஆசைப்படுகிறீர்கள்’ என்பது . அதற்கு விஜய் , ‘ ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லீஸ் பெர்ரிவுடன் இரவு உணவு சாப்பிட ஆசைப்படுகிறேன்’ என்றார்.

 

இந்த பதில் சமூகவலைதளங்களில் ரசிகர்களிடையே வைரலாகியது. தற்போது நேற்று தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் ரிதிமா பதக் உடனான இன்ஸ்டாகிராம்  நேர்காணலில் எல்லீஸ் பெர்ரி பங்கேற்றார். அப்போது முரளி விஜய்யின் ஆசைப் பற்றி பெர்ரியிடம் கூறப்பட்டது. அதற்கு , பெர்ரி “அவர் உணவுக்கான கட்டணத்தை அளிப்பதாக இருந்தால் நிச்சயம் சாப்பிடலாம்” என நகைச்சுவையாக பதிலளித்தார்.தற்போது மெல்போர்னில் குடும்பத்துடன் நேரத்தை அனுபவித்து வருகிறார்,

முரளி விஜய்  கடைசியாக 2018 இல் பெர்த்தில் இந்தியாவுக்காக விளையாடினார். ஐபிஎல் 2020 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விஜய் திரும்பவிருந்தார், ஆனால் கோவிட் -19 தொற்றுநோயால் லீக் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

Categories

Tech |