இனி நாளொன்றுக்கு ஒரு முறை மட்டுமே கொரோனா குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை உயரும் அதே சமயத்தில் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவைப் பொருத்தவரையில் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கான தகவல்களை அந்தந்த மாநில அரசுகள் அவ்வப்போது மக்களிடையே தெரிவித்து வந்தது.
அந்தவகையில், காலை மாலை என இருவேளைகளில் இதுவரை கொரோனா குறித்த தகவல்களை அந்தந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்து வர, இனிமேல் நாளொன்றுக்கு ஒரு முறை மட்டுமே கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, இனி காலை மட்டுமே கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை சுகாதாரத்துறை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் அறிக்கைகளை அடிக்கடி கேட்பதன் மூலம் அதிக பதட்டம் அடைவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.