Categories
சென்னை மாநில செய்திகள்

AC இருந்தா…… வெளியே ஸ்டிக்கர் ஓட்டணும்…… சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!

ACயை இயக்காமல் கடை நடத்த விரும்புவோர் கடைக்கு வெளியில் ஸ்டிக்கரை ஒட்டி கடை நடத்தலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை மே 17ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆனாலும் பல்வேறு பகுதிகளில் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களின் அடிப்படையில் சில தளர்வுகள் உடன் தனிகடைகளை  மே 4ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உள்ளிட்ட பிற மாநில அரசுகளும் அனுமதி அளித்திருந்தனர்.

அந்த வகையில், தமிழக அரசு நேற்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை செய்து இன்று முதல் பல்வேறு பகுதிகளில் உரிய விதிமுறைகளுடன்  கடைகளை திறக்க தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர, அனைத்துப் பகுதிகளிலும் தனிகடைகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் ஏசி உள்ள கடைகள் இயங்க அனுமதி இல்லை. ஒருவேளை ஏசியை இயக்காமல் கடை நடத்த விரும்புவோர், ஏசி செயல்படாது என்ற ஸ்டிக்கரை வாசலில் ஒட்டி வைக்க  வேண்டும் அப்படி செய்வதன் மூலம் கடைகளை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்ததுடன்,

வாடிக்கையாளர்களை முறையான சமூக இடைவெளியை கடைபிடிக்க வைப்பதில், அந்த கடை உரிமையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இன்னும் சில நாட்களுக்கு அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |