Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி தகவல்… அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா…!

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 34 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், புதிதாக 168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பாதிக்கப்பட்டுள்ள 168 பேரில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையில் மூலம் தொற்றுக்கு ஆளானவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி பரிசோதனை மையத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்றை கண்டறியும் ரத்த பரிசோதனை இங்கு செய்யப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 400 நபர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

அதில் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் பணியாற்றி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. நேற்று வரை அரியலூரில் 34 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 6 பேர் குணமடைந்துள்ளனர். 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |