Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு அழிவு….. காப்புரிமைக்காக WAITING…. உலக மக்கள் மகிழ்ச்சி….!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்க்கான தடுப்பு மருந்தை இஸ்ரேல் அரசு கண்டுபிடித்துள்ளது. உலக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வருகிறது.  இன்று வரை அமெரிக்காவில் இறப்பு விகிதம் 72 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், இந்தியாவில் அதனுடைய மொத்த பாதிப்பு பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கும் உள்ளது. 33, 538 பேர் நடப்பு நேரத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். உலகம் முழுவதுமே தற்போது எதிர்பார்க்கக் கூடிய ஒரு விஷயம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து தான். இதை கண்டு பிடித்தால் மட்டுமே நோயின் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடிவதுடன்,

பொருளாதார ரீதியாகவும் உலகம் மீண்டு எழ முடியும். ஏற்கனவே பொருளாதாரத்தில் மிக மோசமான நிலையை பல நாடுகள் சந்தித்து வருகின்றன.

உதாரணமாக பொருளாதார சீரழிவை  தடுக்க, அதிலிருந்து மீண்டுவர உயிர் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என அமெரிக்க அரசு ஊரடங்கை தளர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

எனவே இம்மாதிரியான சூழ்நிலையில் தடுப்பு மருந்து தடுப்பு மருந்து தான் மக்களை பாதுகாக்க ஒரே வழியாக இருக்கும். இம்மாதிரியான எதிர்பார்ப்பில் மக்கள் உள்ள நிலையில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை இஸ்ரேல் அரசு கண்டுபிடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதில், இஸ்ரேலில் உள்ள ஐஐபிஆர் நிறுவனம் உருவாக்கியுள்ள மோனோக்லோனஸ் நியூட்ரிசன் ஆன்டிபாடி என்ற வேதிப்பொருள் கொரோனா வைரஸை அளிப்பதாக சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த தடுப்பு மருந்துக்கான காப்புரிமையை பெற்றபின், உலக நாடுகளுடன் வர்த்தகரீதியான தடுப்பு மருந்து உற்பத்தி தொடங்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உலக மக்களிடையே தற்போது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |