இன்று மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதில் 41 நபர்கள் கோயம்பேடு மாவட்டத்தில் பணி புரிந்து வந்தவர்கள். இதில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 நபர்களும், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 12 நபர்களும் அடங்குவார்கள். அதேபோல ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து காஞ்சிபுரத்தில் மொத்தம் 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்த வரை காஞ்சிபுரம் , ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கொரோனா சிறப்பு வார்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள அனைவருமே மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.