Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மீண்டும் தலை தூக்கிய கொரோனா!…கலக்கத்தில் தூத்துக்குடி மக்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், ஒரு  மூதாட்டி உயிரிழந்தார். மீதமுள்ள 26 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து, கடந்த 16 நாள்களாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது.

இந்நிலையில்,  கொரோனா தொற்று அறிகுறியுடன் செவ்வாய்க்கிழமை சிலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் தூத்துக்குடி தென்திருப்பேரை பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும், ஆதனூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் தூத்துக்குடி ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறி உள்ளது.    இதனால் இவ்வளவு  நாட்கள் மகிழ்ச்சில்  பெருமிதத்துடன் இருந்த தூத்துக்குடி மக்கள் மத்தியில் இந்த கொரோனா மீண்டும் கலக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது.

.

Categories

Tech |