மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் வெளிமாநிலங்களுக்கு சென்று ஏராளமான மதுபிரியர்கள் மதுவை வாங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை அனைத்தும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
திமுக கூட்டணி ஒரு படி மேலே சென்று அனைவரும் அவரவர்கள் வீட்டுக்கு வெளியே 5 பேருக்கு மிகாமல் 15 நிமிடம் அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க அழைத்து விடுத்துள்ளது. இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், எந்த அடிப்படையில் மதுக்கடையை திறக்க அரசு முடிவு செய்கிறது. அது யாருடைய அத்தியாவசிய தேவை. படிப்படியாக மதுவிலக்கு என்று சத்தியம் செய்து ஆட்சிக் கட்டிலில் ஏறிய அரசு இது என்று விமர்சித்துள்ளார் .