கோவில் பூசாரிகளுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். மத்திய மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இது மாநில அளவில் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் அறிவிக்கப்பட்டுளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் என்று வழங்கப்பட்டதைப் போல பல வகைகளில் தொழிலார்களா என தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகின்றது.
இந்த நிலையில் தான் கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருப்பதால் கோவில் பூசாரிகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழக அரசு அவர்களுக்கும் உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. 20 ஆயிரத்து 415 பூசாரிகளுக்கு தலா ஆயிரம் நிதி உதவி கொரோனா தடுப்பு நிவாரணமாக 20,415 பூசாரிகளுக்கு தலா ஆயிரம் நிதியுதவி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.
33,463 பூசாரிகளின் விவரம் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள 20,415 பேருக்கு உதவித்தொகை தரப்பட்டுஉள்ளது என அரசு தெரிவித்துள்ளது .