கௌதம புத்தரின் 15 சிந்தனை வரிகள்…!
1.பகைமையை பகைமையினால் தணிக்கமுடியாது, அன்பின் மூலம் மட்டுமே தணிக்க முடியும்.
2.மனதில் நினைப்பதை சொல்ல வேண்டும், இல்லையெனில் மௌனமாக இருப்பதே சிறந்தது.
3.அமைதியை விட மேலான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை.
4.சோம்பலும் சோர்வும் கொண்டு நூறு ஆண்டு வாழ்வதை விட, ஒருநாள் பெரு முயற்சியோடு வாழ்வது மேலானது.
5.துன்பத்தை ஒழிக்க தூய்மையான வாழ்வு வாழுங்கள்.
6.முட்டாளின் தோழமையை விட ஒருவன் தனியாக வாழ்வதே மேல்.
7.பிறரிடம் குறை கண்டுபிடிப்பது வெகு சுலபம். ஆனால் தன் குற்றத்தை தானே அறிவது தான் வெகு சிரமம்.
8.அறிவாளிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அசைந்து கொடுப்பதில்லை.
9.நன்மையோ, தீமையோ உனது செயலின் பலனை நீ அடைந்தே தீரவேண்டும்.
10.பயனில்லாத சொற்களை பேசுபவனர் வாசமில்லாத மலருக்கு ஒப்பாவான்.
11.ஆசையை வென்ற மனிதனை இந்த உலகத்தில் எவராலும் வெல்ல முடியாது.
12.சிலந்தி தன் வலைக்குள் மட்டுமே சுற்றுவதைப் போல, மனிதன் தன் ஆசைக்கு மட்டுமே கட்டுண்டிருக்கிறான்.
13.போரில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வதைவிட, மனதை வெற்றி கொள்வது சிறந்த செயல்.
14.விழுதல் என்பது வேதனை, விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது சாதனை.
15.எந்தக் காலம் காயை கனியாக்குகிறதோ, அந்த காலம் கனியை அழுகவும் செய்கிறது.