மேற்குவங்க மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1456 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 4 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, மாநிலத்தில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட மொத்த இறப்புகள் இப்போது 72 ஆக உயர்ந்துள்ளதாக மேற்கு வங்க உள்துறை செயலாளர் அலபன் பாண்டியோ பாத்யாய் கூறியுள்ளார்.
ஆனால், கடந்த 2 நாட்களில் மாநிலத்தில் அதிகப்படியான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 80 பேர் உயிரிழந்ததாகவும், இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதுதவிர, மாநிலத்தில் 15 ஆய்வகங்கள், 10 அரசு மற்றும் 5 தனியார் மருத்துவமனைகளில் COVID19 க்கான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு நாளும் சராசரியாக 2500 பேருக்கு சோதனைகள் நடத்தப்படுகின்றன எனவும் மேற்கு வங்க உள்துறை செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் கூறியுள்ளார். நாடு முழுவதும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,391 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 15,525 பேரும், குஜராத்தில் 6,245 பேரும், டெல்லியில் 5,104 பேரும், தமிழகத்தில் 4,058 பேரும், ராஜஸ்தானில் 3,158 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,049 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,880 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.