தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றம் கேள்வி:
இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் , டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா? மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக சென்று டெலிவரி செய்ய முடியுமா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி கேள்வி எழுப்பியது. மேலும் மதுக்கடைகளை திறப்பதற்கு பதில் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியுமா?
தமிழக அரசு விளக்கம்:
மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதுகுறித்து மதியம் 2.30 மணிக்கு பதில் அளிக்க தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாரயணனுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மதுவை ஆன்லைனில் விற்க முடியாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தீர்ப்பு:
கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளை திறக்கப்படுகிற.து மொத்த விற்பனை செய்யப்படமாட்டாது, தனி நபர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய மனுக்கள் மீது இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என உத்தரவிட்ட நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் ஆளும் அரசு நிம்மதி அடைந்துள்ளது.