Categories
மாநில செய்திகள்

புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கு மேம்பாட்டு சிகிச்சை பயிற்சி பெட்டகம்: தமிழக அரசு..!

புற உலக சிந்தனையற்ற குழந்தைகளின் மருத்துவ மறு வாழ்விற்கான மேம்பாட்டு சிகிச்சை பயிற்சி பெட்டகம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புற உலக சிந்தனையற்ற குழந்தைகள், ஒளி,சத்தம் மற்றும் தொடுதலுக்கு மிகுந்த உணர்திறன் அல்லது குறைந்த உணர்திறன் கொண்டவர்களுக்கு பயிற்சி பொருள் பெட்டகம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வழங்க 19 மாவட்டங்களுக்கு தமிழக அரசு தற்போது பொருட்களை விநியோகம் செய்துள்ளது.

கொரோனா பரவல் நாட்டில் வேகமெடுக்க ஆரம்பித்ததில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக அனைத்து வணிக நிறுவனங்கள், தொழிசாலைகள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. ஊரடங்கு 21 நாட்களை கடத்த போது, மேலும் 19 நாட்களுக்கு 2ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டது.

அப்போது, கொரோனா பாதிப்பு அதிகம் இல்ல இடங்களில் சில தளர்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, மே 3ம் தேதியோடு முடிவடைய இருந்த ஊரடங்கை 3ம் கட்டமாக மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. மேலும், பச்சை, ஆரஞ்சு, சுவப்பு மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் வெளியிடப்பட்டது.

அதன்படி பல்வேறு மாநிலங்களில் சில தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. மேலும், கொரோனா காரணமாக புற உலக சிந்தனையற்ற குழந்தைகள் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் இருக்கும் புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கு மருத்துவ மேம்பாட்டு சிகிச்சை பயிற்சி பெட்டகம் வழங்கப்படுவதாக கூறியுள்ளது.

Categories

Tech |